சீனாவில் இருந்த இலங்கை மாணவர்களுக்கு கொரோனா இல்லை

சீனாவில் இருந்து இலங்கைக்கு அழைத்து செல்லப்பட்ட மாணவர்கள் ராணுவ முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சீனாவின் வூஹானில் இருந்து இலங்கைக்கு அழைத்து செல்லப்பட்ட 33 மாணவர்களுக்கும் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கான எவ்வித அறிகுறிகளும் இல்லை என கொழும்பு ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எனினும், இலங்கை ஊவா மாகாணத்தின் தியத்தலாவை பகுதியில் உள்ள ராணுவ முகாமில் 33 மாணவர்களுக்கும் தனியாக அறைகள் வழங்கப்பட்டுள்ளதுடன் ஆடை, உணவு, இணைய வசதி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. 14 நாட்கள் மாணவர்கள் அங்கு தங்கியிருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே, இலங்கையில் உள்ள சீனர்கள் பல்வேறு இடங்களுக்கு பயணிப்பது முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

Exit mobile version