மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு, இலங்கை சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்திய பிரதமராக பதவியேற்ற பின்னர் தனது முதல் வெளிநாடு சுற்றுப்பயணமாக மாலத்தீவுக்கு மோடி பயணம் மேற்கொண்டார். இதனைத்தொடர்ந்து மாலத்தீவு பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி இலங்கைக்கு புறப்பட்டார். கொழும்பு விமானநிலையத்தில், பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பிரதமர் மோடியை வரவேற்றார்.
பின்னர், இலங்கை அதிபர் சிறிசேனா, பிரதமர் மோடிக்கு பாரம்பரிய வரவேற்பு அளித்தார். அந்நாட்டு அதிபர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடைபெற்ற ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார்.