2020ம் ஆண்டு இலங்கையில் புதிய அரசாங்கம் ஒன்றை அமைக்க போவதாக இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் அதிபர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 68வது ஆண்டு நிறைவு விழா இடம்பெற்றது. விழாவிற்கு தலைமை தாங்கி பேசிய அதிபர், பலமான சக்தியை பயன்படுத்தி அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தி 2020-ம் ஆண்டு புதிய அரசாங்கத்தை அமைப்போம் என்றும், இதற்கு அனைவரும் தயாராக இருக்க வேண்டுமென்றும் தெரிவித்தார். மேலும் மோசடியில் சம்பந்தப்பட்டவர்களை சட்டத்தின் பிடிக்கு கொண்டு வரும் ஆவணங்கள் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். குற்றம்சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தின் கூண்டில் ஏற்றப்படுவார்கள் எனவும் அதிபர் சிறிசேன தெரிவித்தார்.