இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்தவடைந்த நிலையில், வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் கோத்தபய ராஜபக்ச தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.
இலங்கையில், அதிபர் தேர்தலுக்காகன வாக்குபதிவு நேற்று நிறைவடைந்தது. இலங்கை வரலாற்றிலேயே அதிகபட்சமாக 35 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில் அந்நாட்டின் 8 வது அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது. இதில், பொதுஜன பெரமுனா கட்சியின் சார்பில் போட்டியிடும் முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சவின் சகோதரர் கோத்தபய ராஜபக்சவுக்கும், ஐக்கிய தேசிய கட்சியின் சஜித் பிரேமதாசாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. நாடு முழுவதும் உள்ள 12 ஆயிரத்து 845 வாக்கு மையங்களில் மொத்தம் 81 புள்ளி 52 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், தற்போது வாக்கு எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி, சஜித் பிரேமதாசாவைவிட கோத்தபய ராஜபக்ச அதிக வாக்குகளை பெற்று முன்னிலை வகிக்கிறார். இதனால் இலங்கை அதிபர் தேர்தல் முடிவுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.