இலங்கை நாடாளுமன்றம் இன்று மீண்டும் கூடுகிறது

பரபரப்பான அரசியல் சூழலில் இலங்கை நாடாளுமன்றம் இன்று மீண்டும் கூடுகிறது.

இலங்கை அரசியலில் அதிகார மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து, பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்சே நீக்கப்பட்டு, ராஜபக்சே நியமிக்கப்பட்டார். உச்சநீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் ராஜபக்சே தோல்வி அடைந்தார். இதனால் ஆத்திரமடைந்த அவரது ஆதரவு எம்.பி.க்கள், நாடாளுமன்றத்தில் வன்முறையில் ஈடுபட்டனர்.

இதில், சபாநாயகர் கரு.ஜெயசூர்யா உள்பட பலர் தாக்கப்பட்டதால், அவை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், அரசியல் குழப்பங்களுக்கு தீர்வு காண அதிபர் சிறிசேனா நேற்று அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். ராஜபக்சே, ரணில் விக்ரமசிங்கே ஆகியோர் பங்கேற்ற இந்த கூட்டத்திலும் சமாதானம் ஏற்படவில்லை. இந்நிலையில், மீண்டும் இன்று நாடாளுமன்ற கூட்டம் நடக்க இருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Exit mobile version