தமிழக மீனவர்களின் கோரிக்கை – இலங்கை கடற்படையினரின் தாக்குதலால் தொடரும் உயிரிழப்புகள்- மக்கள் போராட்டம்..

திமுக ஆட்சி பொறுப்பேற்ற இந்த 5 மாதங்களில் தமிழ்நாடு மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதல் சம்பவம் அதிகரித்திருப்பது, மீனவ மக்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை கடற்படையினரின் கொலை வெறித் தாக்குதலால், புதுக்கோட்டை மீனவர் ராஜ்கிரண் நடுக்கடலில் மூழ்கி பலியானார். அவரது உடலை, இலங்கை அரசிடம் இருந்து மீட்டு உறவினர்களிடம் வழங்க திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்தும், இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க கோரியும் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டினத்தில் 600க்கும் மேற்பட்ட மீனவ மக்கள் 2வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இலங்கை கடற்படை தாக்குதலை கண்டித்து ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் மீனவ மக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மரணமடைந்த மீனவரின் குடும்பம் மற்றும் காயமடைந்த மீனவர்கள் குடும்பத்துக்கும் நிவாரணம் வழங்கிடவும், மீனவர் வாழ்வுரிமை இயக்க மீனவர் பாதுகாப்பு சட்டம் கொண்டு வரவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.


கடந்த அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல் மிக குறைவாக இருந்தது. அவ்வாறு தமிழ்நாடு மீனவர்கள் பாதிக்கப்பட்ட போதும் அதனை உடனடியாக மத்திய அரசின் கவனத்துக்கு அதிமுக அரசு கொண்டு சென்று, தமிழ்நாடு மீனவர்களையும் அவர்களது படகுகளை மீட்கும் முயற்சிகளில் துரிதமாக செயல்பட்டது. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த 5 மாதங்களுக்குள்ளே, தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படை தாக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இவ்வாறு தாக்குதல் சம்பவங்கள் நிகழும் போது, அதனை மத்திய அரசின் கவனத்துக்கு திமுக அரசு எடுத்து செல்லாமல் மெத்தனமாக இருப்பதால், இலங்கை கடற்படையின் அட்டூழியங்களும் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. குறிப்பாக நடுக்கடலில் தமிழ்நாடு மீனவர்களை விரட்டியடிப்பது, படகுகளை சேதப்படுத்துவது, வலைகளை அறுத்தெறிவது, படகுகளை பறிமுதல் செய்வது, மீனவர்களை கைது செய்து இலங்கை சிறையில் அடைப்பது என ஏராளமான சம்பவங்கள் அரங்கேற்றப்படுகிறது.


எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேசுவரம் மீனவர்களை தாக்கியது, நாகை மாவட்ட மீனவர்கள் 23 பேரை கைது செய்தது, புதுக்கோட்டை மாவட்ட மீனவர்களின் படகை மோதி மீனவர் ஒருவரை கொலை செய்தது வரை இலங்கை கடற்படை அக்கிரமங்களுக்கு திமுக அரசு எதிர்ப்பை காட்டாமலும், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்காமல் இருப்பதும் மீனவ மக்களை கொந்தளிக்க செய்துள்ளது.

 

மேற்கண்ட செய்தியில் பாதிக்கப்பட்டவர்களின் பெற்றோர்,மீனவர்கள்,பொதுமக்கள்,அமைச்சர் ஆகியோர் அளித்த பேட்டிகளை காண
⬇⬇⬇⬇ ⬇⬇⬇⬇

Exit mobile version