இராமேஸ்வரம் மீனவர்கள் ஏழு பேர் இலங்கை கடற்படையால் மீண்டும் சிறைபிடிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இராமேஸ்வரத்தில் இருந்து துரைசிங்கம் என்பவருக்கு சொந்தமான படகில், ஜோசஃப் பால்ராஜ், இன்னாசி, பெனிட்டோ, நாகராஜ் உள்ளிட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர். கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த போது, இயந்திரக்கோளாறு காரணமாக, படகு இலங்கை கடல் பகுதிக்குள் சென்றது. அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த இலங்கை கடற்படையினர் , மீனவர்கள் ஏழு பேரையும் கைது செய்தனர். மேலும், மீனவர்களின் படகையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம், மன்னார் கடற்படை முகாமில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Discussion about this post