இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து சுற்றுலா தலமான கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டு உள்ளது.
இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையின் போது பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்புகளில் 400க்கும் மேற்பட்டோர் பலியாகினர். உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து அண்டை நாடுகள் பாதுகாப்பை பலப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தில் ரயில்வே நிலையங்கள் வழிபாட்டு தளங்கள் மற்றும் சுற்றுலா மையங்களில் போலீசார் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையங்கள் பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பாதுகாப்பு பணி பலப்படுத்தப்பட்ட நிலையில், பயணிகளின் உடமைகளையும் கடும் சோதனைக்கு பின்னரே போலீசார் அனுமதிக்கின்றனர்.