கடைசி ஒரு நாள் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்துமா இலங்கை

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. உலககோப்பையில் சிறப்பாக ஆடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்த வங்கதேச அணி, இலங்கையுடனான தொடரில் சொதப்பி வருகிறது. முதல் இரு போட்டிகளிலும் வெற்றி பெற்று 2க்கும் பூஜியம் என்ற கணக்கில் முன்னிலையில் உள்ள இலங்கை அணி, இன்றைய ஆட்டத்திலும் வென்று வங்கதேசத்தை ஒயிட் வாஷ் செய்ய முனைப்பு காட்டி வருகிறது. இலங்கை நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு ஆட்டம் துவங்குகிறது.

Exit mobile version