இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று நிகழ்ந்த தற்கொலைப் படை தாக்குதலில் சேதமடைந்த புனித அந்தோணியார் தேவாலயம் புனரமைக்கப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி ஈஸ்டர் தினத்தன்று ஐ.எஸ் தீவிரவாதிகளின் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். உலகையே உலுக்கிய இச்சம்பவத்தில் 250க்கும் அதிகமானோர் பலியான நிலையில், 500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இத்தாக்குதலில் கொழும்புவில் உள்ள கொச்சிக்கடை புனித அந்தோணியார் தேவாலயம் கடுமையாக சேதமடைந்தது. இதனையடுத்து அந்தோணியார் தேவாலயத்தின் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, கொழும்பு மறை மாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தலைமையில் திருப்பலி நிறைவேற்றப்பட்டு தேவாலயம் மீண்டும் திறக்கப்பட்டு, சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது.