இலங்கை கடற்பகுதியில் மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 15 மீனவர்களை விடுவிக்கவும், அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 52 படகுகளை திருப்பித் தரவும் இலங்கை முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார், இரண்டுநாள் பயணமாக இந்தியா வந்த இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஷ் குணவர்த்தன, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்துப் பேசினார் என்றும்,இரு நாட்டு அமைச்சர்களும் பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு விஷங்கள் குறித்துப் பேசினர் என்றும் தெரிவித்தார். அப்போது இலங்கையில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் மீனவர்கள் விவகாரம் குறித்தும் பேசப்பட்டது என்றும்,இதை அடுத்து, இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஷ் குணரத்ன, விரைவில் இந்திய மீனவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்ததாக கூறினார். மேலும், அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளும் திருப்பித்தரப்படும் என்று உறுதியளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.