இலங்கையில், கொழும்பு நகரில் நடைபெற்ற சோதனையில், கையெறிகுண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதால், பதற்ற நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது. கடந்த 21ம் தேதி, இலங்கையில் நடந்த தொடர்குண்டுவெடிப்பில் 300க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. பல்வேறு இடங்களில் தொடர்ந்து சோதனைகள் நடைபெற்றுவரும் தருணத்தில், இன்று நடந்த சோதனையில், கொழும்பு முட்வால் என்ற பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் 21 கையெறி குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த கையெறி குண்டுகள் உள்ளூரில் தயாரிக்கப்பட்டவை என்று இலங்கை காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, நுவரெலியா நகரில் ஹவேலியா என்ற பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில், 200 டெட்டனேட்டர்களை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். தீவிரமாக நடத்தப்பட்டுவரும் சோதனைகளில், தொடர்ந்து வெடி பொருட்கள் சிக்குவதால், இலங்கையில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. இந்நிலையில், இலங்கை குண்டுவெடிப்பில் பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.