இலங்கை உள்நாட்டு போரின் போது, மனித உரிமை மீறலில் ஈடுபட்ட புகாரில், இலங்கை ராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா, அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் 2009ம் ஆண்டு நடைபெற்ற உள்நோட்டு போரின் போது, ஏராளமான தமிழர்கள் கொல்லப்பட்டனர். இப்போரில் மனித உரிமை மீறல்கள் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், இலங்கையின் தற்போதைய ராணுவ தளபதி ஷவேந்திரா சில்வா மற்றும் அவரது குடும்பத்தினர், அமெரிக்காவுக்குள் நுழைய, அமெரிக்க அரசு தடை விதித்துள்ளதாக, அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார். மனித உரிமை மீறல் விவகாரத்தில், ஷவேந்திர சில்வா மீதான புகார்ளை, ஐநா மற்றும் பிற அமைப்புகள் உறுதிபடுத்தியுள்ளதாக மைக் பாம்பியோ குறிப்பிட்டுள்ளார்.