இலங்கை குண்டுவெடிப்பு: 253 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இலங்கையில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் 253 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் பொது சுகாதாரத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

கடந்த புனித ஞாயிறன்று, இலங்கையின் தலைநகர் கொழும்புவில் தேவாலயம், ஹோட்டல்கள் உள்ளிட்ட 9 இடங்களில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 359ஆக உயர்ந்ததாகக் கூறப்பட்டது. இந்நிலையில் இது குறித்த செய்தியை அந்நாட்டின் பொதுசுகாதாரத்துறை அமைச்சகம் மறுத்துள்ளது. இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ள இலங்கை அரசின் பொது சுகாதாரத்துறை அமைச்சகம், மிகவும் கொடூரமான முறையில் வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டதால், உடல்களை அடையாளம் காண்பதில் மிகுந்த சிரமம் இருந்ததாக கூறியுள்ளது. இத்தாக்குதலில் 253 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

Exit mobile version