மனிதனுக்கே உணவில்லாத போதும் சிறிது அணிலுக்கு இயப்படும் என்பது போல ஒருவர் அணிலுக்கு தினமும் உணவளித்து வருகிறார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள ஆ. கலிங்கப்பட்டியில் செந்தில்குமார் என்பவர் தனது வீட்டின் அருகில் வந்து செல்லும் அணில் ஒன்றிற்கு தினமும் உணவளித்து வருகிறார். ஸ்ரீராம் என்ற பெயர் வைத்து பழகியதால் நாளடைவில் ஸ்ரீராம் என்று அழைத்தவுடன் அணில் இறங்கி வந்து உணவினை எடுத்துக் கொள்கிறது. செந்தில்குமாரின் குடும்ப உறுப்பினராக மாறியிருக்கும் அந்த அனில் அவரது இல்லத்தில் உள்ள குழந்தைகளுடனும் விளையாடுவது அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.