கசக்கி வீசப்பட்ட அமமுக… அதிமுகவுக்கு மீண்ட இசக்கி சுப்பையா

ஆர்.கே.நகர் வாக்காளர்களை மட்டுமல்ல தனது ஆதரவாளர்களையும் ஏமாற்றியே வந்திருக்கிறார் தினகரன் என்பதை இசக்கி சுப்பையா அமமுகவில் இருந்து விலகிய நிகழ்வு மக்களுக்குக் காட்டுகிறது. தினகரனின் கூடாரத்தில் தூணாகவே இருந்தவர்கள் துயரோடு வெளியேறுவது ஏன்? – இந்தத் தொகுப்பில் பார்ப்போம்.

நன்றி உணர்ச்சியோ, சக மனிதர்கள் மீது அக்கறையோ இல்லாத அரசியல் நடிகர் தான் தினகரன். அதனால்தான் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தான் இறக்கும் வரையில் தினகரனை பக்கத்தில் சேர்க்காமல் இருந்தார்.

ஆனால் ஜெயலலிதா அவர்களின் மறைவுக்குப் பின்னர் கட்சியில் ஏற்பட்ட குழப்பத்தைப் பயன்படுத்தி கட்சியில் நுழைந்த தினகரன், கட்சியினராலேயே மீண்டும் வெளியேற்றப்பட்ட நிலையில், அதிமுகவின் தொண்டர்கள் சிலரையும், பேராசைமிக்கவர்கள் சிலரையும் ஏமாற்றி அழைத்துச் சென்றார். இதனால் மக்கள் தினகரனை ஒருபோதும் ஏற்கவில்லை.

தொப்பி சின்னம் சர்ச்சை, இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு, 18 எம்.எல்.ஏ.க்கள் நீக்க வழக்கு, மக்களவைத் தேர்தலின் படுதோல்வி – ஆகிய அனைத்தின் பின்னும் கூட தினகரன் தன்னை பெரிய அரசியல் தலைவராக கற்பனை செய்வதை நிறுத்தாததாலும், தினகரன் தன்னை ஏமாற்றுகின்றார் – என்பது புரிந்ததனாலும் இப்போது தினகரனின் கூடாரம் தரைமட்டமாகிக் கொண்டு இருக்கிறது. 

இந்நிலையில் அமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டு தினகரன் பக்கம் வந்த செந்தில் பாலாஜி, தங்கத் தமிழ்ச்செல்வன் போன்ரவர்கள் திமுகவின் பக்கமும், ஆசை வார்த்தைகளால் ஏமாற்றப்பட்டு தினகரன் பக்கம் வந்த இசக்கி சுப்பையா போன்றவர்கள் மீண்டும் அதிமுகவின் பக்கமும் சேர்கின்றனர். இந்நிலையில், தமிழக அரசியல் களத்தில் தத்தளிக்கும் அகதியாகி உள்ளார் தினகரன்.

இன்று அமமுகவில் இருந்து விலகி, அதிமுகவில் தன்னை சங்கமித்துக் கொண்ட இசக்கி சுப்பையா அதிமுகவின் எம்.எல்.ஏ.வாக அம்பாசமுத்திரம் மக்களால் 2011ல் தேர்ந்தெடுக்கப்பட்டவர், அம்மா அவர்களால் அமைச்சராக்கி அழகுபார்க்கப்பட்டவர். அவருக்கு தவறான வாக்குறுதிகளைக் கொடுத்த தினகரன், அவரைக் கூடியவரை பயன்படுத்திக் கொண்ட நிலையில்தான் அவரது சொந்த முகம் தெரிந்து வெளியேறுவதாக இசக்கி சுப்பையா மக்களிடம் விளக்கி உள்ளார். இசக்கி சுப்பையாவின் மனநிலைதான் தினகரனை நம்பிய ஒவ்வொருவரின் மனநிலையாகவும் உள்ளது.

குடம் உடைவதைப் போல அல்லாமல், ஒரு குமிழி உடைவதைப் போல உடைந்திருக்கிறது அமமுக. கொள்கை இல்லாத கட்சி, நேர்மை இல்லாத கட்சி, தொண்டர்கள் இல்லாத கட்சி – எனப் பல பெருமைகளைக் கொண்ட அமமுக இப்போது நிர்வாகிகளும் இல்லாத கட்சியாகிவிட்டது. இதனை அதிமுகவை உடைக்க நினைத்த தினகரனின் கெட்ட எண்ணத்திற்குக் கிடைத்த பரிசாகவே மக்கள் பார்க்கிறார்கள்.

 
 
Exit mobile version