மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கான விற்பனை அங்காடி!

கோவையில் தமிழ்நாடு ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ். மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான விற்பனை அங்காடியை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்.

தமிழக அரசு மகளிர் மேம்பாட்டில் தனிக்கவனம் செலுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் கைவினைப் பொருட்கள் விற்பனை செய்யும் விதமாக கோவை டவுன்ஹால் பகுதியில் விற்பனையகம் அமைக்கப்பட்டது. 40 கடைகளை கொண்ட விற்பனையகத்தை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மக்கள் பயன்பாட்டிற்காக திறந்துவைத்தார். இந்த நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி, மாநகர ஆணையாளர் குமாரவேல் பாண்டியன், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Exit mobile version