அவசர கால பயன்பாட்டுக்கு sputnik v தடுப்பூசி!

கோவிஷீல்டு, கோவாக்சினை தொடர்ந்து ரஷ்யாவின் “Sputnik-V” தடுப்பூசியை அவசர காலத்திற்கு பயன்படுத்தி கொள்ள இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு மையம் அனுமதி வழங்கியுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பை கட்டுப்படுத்த கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்த நிலையில் 10 கோடிக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை அதிகரித்துள்ளதால் தடுப்பூசி செலுத்தும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கென, மேலும் 5 தடுப்பூசிக்கு விரைவில் அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ரஷ்ய தயாரிப்பான “Sputnik-V” தடுப்பூசியை இந்தியாவில் அவசர காலத்திற்கு பயன்படுத்தி கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் DR.Reddys மருந்து தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து “Sputnik-V” தயாரிக்கப்பட உள்ளது. உலகிலேயே கொரோனாவுக்கான முதல் தடுப்பூசியாக கருதப்படும் “Sputnik-V” இந்தியாவில் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version