ஸ்பைடர்மேனுக்கு ஆப்பு வைத்த தமிழ் ராக்கர்ஸ்!!

ஹாலிவுட்டின் சூப்பர் ஹீரோக்களில் உலகம் முழுவதும் அதிகளவு ரசிகர்களை கொண்ட கேரக்டர் “ஸ்பைடர்மேன்”. ஒவ்வொரு முறையும் ஸ்பைடர்மேன் வரிசைகளின் படம் வெளியாகும் போது தியேட்டர்கள் குழந்தைகளால் கொண்டாடப்படும் அளவிற்கு வரவேற்பு இருக்கும். இந்நிலையில் “அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்” படத்தை தொடர்ந்து உலகம் முழுவதும் உள்ள மார்வெல் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியிருந்த படம் “ஸ்பைடர் மேன்-ஃபார் ஃப்ர்ம் ஹோம்”. இத்திரைப்படம் ஜுலை 4ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான ஆன்லைன் முன்பதிவும் தொடங்கியிருந்த நிலையில் திடீரென தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் முழுப்படமும் வெளியாகி உள்ளது. இந்நிகழ்வு டி.சி பேன்ஸ் மத்தியில் சந்தோஷத்தையும் மார்வெல் பேன்ஸ் மத்தியில் சோகத்தையும் எற்படுத்தியுள்ளது. இருந்தாலும் “ஸ்பைடர் மேன்-ஃபார் ஃப்ர்ம் ஹோம்” மிக பெரிய வசூலை வாரி குவிக்கும் என மார்வெல் தரப்பில் கூறப்படுகிறது.

இந்நிலையில் படக்குழுவின் சீரிய முயற்சியால்  தமிழ் ராக்கர்ஸின் இணையதளத்தில் இருந்து தற்போது படத்தின் இணைய பக்கங்கள் நீக்கப்பட்டுள்ளது. 

 

 

Exit mobile version