இந்தோனேசியாவில் குப்பை அள்ளிய ஸ்பைடர்மேன்

இந்தோனேசியாவில் ஸ்பைடர்மேன் உடையில் இளைஞர் ஒருவர் குப்பைகளை சுத்தம் செய்யும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது..

இந்தோனேசியாவில் உள்ள கடலில் ஆண்டுக்கு 3.2 மில்லியன் டன் குப்பைகள் உற்பத்தியாகி, அவற்றில் பாதியளவு கடலில் கலப்பதாக சமீபத்தில் வெளியான ஆய்வில் தெரிவிக்கப்பட்டது.இதனை தடுத்து நிறுத்த  இந்தோனேசியா அரசு கடுமையாக போராடி வருகிறது.

இந்நிலையில் ரூடி ஹார்டனா என்ற 36 வயது நபர் ஒருவர் வித்தியாசமான முறையில் குப்பைகள் கடலில் கலப்பதை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

இந்தோனேசியாவில் பாரி பகுதியில் வசிக்கும் அவர், ஸ்பைடர்மேன் உடையில் குப்பைகளை சேகரித்து சுத்தம் செய்து வருகிறார்.

இந்த வித்தியாசமான விழிப்புணர்வு குறித்து ரூடி கூறுகையில், இந்தோனேசியாவின் அனைத்து மக்களும் இத்தகைய சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு நாட்டை காக்க வேண்டும் என்பதால் இத்தகைய உடை அணிந்ததாக தெரிவித்துள்ளார்.

Exit mobile version