காலி நாற்காலிகளுக்கு மத்தியில் உரை நிகழ்த்திய ராஜகண்ணப்பன்

அதிமுகவில் இருந்து வெளியேறிய முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன், தனக்கு பல்லாயிரக்கணக்கான ஆதரவாளர்கள் உள்ளதாக கூறி இருந்தார். இந்நிலையில் தேனி மக்களவை தொகுதிக்குட்பட்ட வாடிபட்டியில், யாதவ மகாசபை செயல்வீர்கள் கூட்டம் என்ற பெயரில் கூட்டம் ஒன்றை நடத்தினார். இந்த கூட்டத்தில் இரட்டை இலக்க எண்ணிக்கையிலான ஆதரவாளர்களே வருகை தந்தனர்.

பெரும்பாலான இருக்கைகள் காலியான இருந்தன. அதிமுகவில் இருந்து அவர் வெளியேறிய நிலையில், அவருடன் தொண்டர்கள் யாரும் வெளியேறவில்லை என்பதற்கு இந்த கூட்டமே சாட்சியாக அமைந்தது.

Exit mobile version