கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு வழிபாடு!

நாடு முழுவதும் இன்று கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுவதையொட்டி, சென்னையில் உள்ள கிருஷ்ணர் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஊரடங்கின் ஒரு பகுதியாக, மாநகராட்சி பகுதியில் உள்ள 10 ஆயிரம் ரூபாய்க்கு கீழ் வருமானம் வரக்கூடிய சிறிய கோயில்களை திறக்கலாம் என அரசு அனுமதி அளித்தது. இந்நிலையில், இன்று கிருஷ்ண ஜெயந்தியையொட்டி சென்னை கோபாலபுரத்தில் உள்ள ஸ்ரீ வேணுகோபால சுவாமி ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. காலை 2 மணி நேரம், மாலை ஒரு மணி நேரம் என கோயில்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அரசின் விதிமுறைகளை பின்பற்றி பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

Exit mobile version