கும்பகோணத்தில் மாசி மகத்தை முன்னிட்டு மகாமக குளத்தில் சிறப்பு வழிபாடு

கும்பகோணம் மகாமக குளத்தில் மாசி மகத்தை முன்னிட்டு நான்கு கரைகளிலும் ஏராளமான பொதுமக்கள் தீபங்கள் ஏற்றி வழிபாடு செய்தனர்

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள பிரசித்திபெற்ற மகாமக குளத்தில் மாசி மகத்தை முன்னிட்டு,  ஏராளமானோர் தீபங்கள் ஏற்றி வழிபட்டனர். நீர் நிலைகளை  பாதுகாக்கும் வகையில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த வழிபாடு மேற்கொள்ளப்பட்டது. இதனை முன்னிட்டு, மகமாக குளத்தின்  நான்கு கரைகளிலும்  ஏராளமானோர் தீபங்களை ஏற்றி வழிபட்டனர். மேல் கரையில் பல்வேறு அடுக்கு அலங்கார விளக்குகளால் தீபாராதனைகள்  காண்பிக்கப்பட்டது.  இந்த நிகழ்ச்சியில் பல்வேறு மடங்களை சேர்ந்த மடாதிபதிகளும், ஏராளமான சாதுக்களும் கலந்து கொண்டனர் .முன்னதாக ஏராளமான பெண்கள் முளைப்பாரி ஏந்தியபடி மகாமக குளத்தை வலம் வந்தனர். பின்னர்,  அன்னை சித்தர் மடம் சார்பில் பொதுமக்களுக்கு  அன்னதானம் வழங்கப்பட்டது.

Exit mobile version