சென்னை மாநகராட்சியின் சிறப்பு பணிகள் – ஜெர்மன் தொழில்நுட்பத்தில் மழைநீர் வடிகால்

சென்னையில் கனமழையின் போது தண்ணீர் தேக்கம் ஏற்படாமல் இருக்க, ஜெர்மன் தொழில்நுட்பத்திலான வடிகால்கள், உறை கிணறுகள் அமைப்பது போன்ற மழைநீர் சேகரிப்பு திட்டங்களை, சென்னை மாநகராட்சி மேற்கொண்டது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அறிவுறுத்தலின் பேரில், சென்னை மாநகராட்சி மேற்கொண்ட சிறப்பான நடவடிக்கைகளால், நகர் பகுதிகளில் மழை காலங்களில் நீர் தேங்கும் இடங்கள் 306-இல் இருந்து 9 ஆக குறைக்கப்பட்டன. இதனால் கடந்த காலங்களை போன்று இல்லாமல், சென்னையில் நிவர், புரெவி புயல்களால் ஏற்படவிருந்த பெரும் பாதிப்புகள் தடுக்கப்பட்டன.

ஆனால், புறநகர் பகுதிகளான பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளில், நீர் தேங்கி இருந்தது. குறிப்பாக குடியிருப்புகள், சாலைகள் என எங்கு பார்த்தாலும் ஏரி போல் காட்சியளித்தன. இதனை தடுத்து வீணாகும் மழைநீரை சேமித்து வைக்க, கொட்டிவாக்கம் முதல் உத்தண்டி வரையில், ஜெர்மன் தொழில்நுட்பத்திலான வடிகால்கள் அமைக்கும் திட்டத்தை, சென்னை மாநகராட்சி தொடங்கியது.

இதேபோல், கோவளத்தில் பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, அப்பகுதிகளிலும் மழைநீர் வடிகால் அமைக்கும் திட்டத்தை சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது. 1137 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட கோவளம் பகுதியில், 980 ஹெக்டேர் குடியிருப்புகளாகவும், 139 ஹெக்டேர் சாலைகளாகவும் காணப்படுகின்றன.

கடந்த 20 ஆண்டுகளில் இந்தப் பகுதி அசுர வளர்ச்சியைக் கண்டுள்ளது. இதனை அடிப்படையாக கொண்டு, மீதமுள்ள 7 புள்ளி 8 ஹெக்டர் நிலப்பரப்பில், சென்னை மாநகராட்சி வடிகால் அமைக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளது. ஜெர்மன் தொழில்நுட்பத்தில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தால், வருங்காலங்களில் மழைநீர் தேங்குவது முற்றிலும் தவிர்க்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், இதனை புரிந்துகொள்ளாமலும், மக்கள் நலனில் அக்கறை இல்லாமலும் செயல்படும் திமுக, தங்களது பொய் பிரசாரத்தின் மூலம், பயனுள்ள அரிய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மக்கள் நலன் மீதான அக்கறையுடன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டு வரும் இத்திட்டங்களில் இருக்கும் நன்மையையும், உண்மைத் தன்மையையும், மக்கள் உணர்ந்து முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்பதே மாநகராட்சி அதிகாரிகளின் கோரிக்கையாக உள்ளது.

Exit mobile version