தமிழகத்தில் மேலும் 3 வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கம்!!

தமிழகத்தில் பயணிகள் நலன் கருதி சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், கூடுதலாக மூன்று சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. திருச்சி – செங்கல்பட்டு, செங்கல்பட்டு – திருச்சி, அரக்கோணம் – கோயம்புத்தூர் ஆகிய வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் வரும் 12ம் தேதி முதல் தினமும் இயக்கப்பட உள்ளன. திருச்சி – செங்கல்பட்டு மார்க்கத்தில் இயங்கும் சிறப்பு ரயில் அரியலூர், விழுப்புரம், மேல்மருவத்தூர் ஆகிய ரயில் நிலையங்கள் நிற்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. செங்கல்பட்டு – திருச்சி இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் மேல்மருவத்தூர், விழுப்புரம், திருப்பாதிரி புலியூர், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  அரக்கோணம் – கோவை மார்க்கத்தில் இயக்கப்படும் சிறப்பு ரயிலானது காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

Exit mobile version