கோடை விடுமுறையையொட்டி நெல்லை மாவட்டம் தென்காசியில் பரதநாட்டியத்தின் அடிப்படையை மாணவிகள் அறிவதற்கான சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
கோடை விடுமுறையில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகள் தங்களது விடுமுறையை மகிழ்ச்சியாக கொண்டாடுவதோடு மட்டுமின்றி சிலம்பம், கராத்தே, நீச்சல் ஆகிய பயிற்சிகளை மேற்கொள்வதன்மூலம் அவற்றை பயனுள்ள வகையிலும் கழித்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழகத்தின் பாரம்பரியத்தை எடுத்துக்கூறும் பரதநாட்டிய கலையை மாணவியரிடையே அதிகளவில் கொண்டு சேர்க்கும்வகையில் தென்காசியில் பரதநாட்டிய சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
விடுமுறையை மாணவிகள் பயனுள்ளவகையில் கழிக்கும்வகையிலும் பரதநாட்டியத்தின் அடிப்படையை அவர்களுக்கு கற்றுக்கொடுக்கும் வகையிலும் இந்த சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. 7 முதல் 19 வயது வரையிலான மாணவிகளுக்கு இந்த சிறப்பு பயிற்சியை தென்காசியை சேர்ந்த புருஷோத்தமன் என்பவர் அளித்து வருகிறார். தினமும் மாலை வேளைகளில் 2 மணி நேரம் இந்த பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது