கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வட்டாச்சியர் அலுவலகத்தில் மண்டல அளவிலான தேர்தல் அலுவலர்களுக்கு வாக்குப்பதிவு இயந்திர இயக்கம் குறித்து சிறப்பு பயிற்சியளிக்கப்பட்டது.
கோவை மாவட்ட துணை ஆட்சியரும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலருமான குமரேசன் முன்னிலையில் பயிற்சி முகாம் நடைபெற்றது.வாக்குப்பதிவு இயந்திரம் செயல்படும் விதம் பற்றி எடுத்துக் கூறப்பட்டது . மேலும் இத்தேர்தலில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள வாக்காளர்கள் தாங்கள் வாக்களித்த விவரத்தை தெரிந்து கொள்ளும் தணிக்கை இயந்திரம் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. இப்பகுதி 29 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு மொத்தம் 321 வாக்குசாவடிகள் அமைக்கப்படுகிறது. இந்த வாக்குசாவடிகள் அனைத்திற்கும் தனித்தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு தேர்தல் நடத்தப்படவுள்ளது. இதனையடுத்து இந்த வாக்குச்சாவடிகளில் தேர்தல் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் அனைவருக்கும் வாக்குப்பதிவு இயந்திரம் நேரிடையாக விளக்கம் அளிக்கப்பட்டது.