ஜல்லிக்கட்டு போட்டிக்கு காளைகளுக்கு சிறப்பு பயிற்சி

பொங்கல் பண்டிகை என்றாலே நம் நினைவுக்கு வருவது காளைகளும், ஜல்லிக்கட்டு போட்டிகளும் தான். பொங்கலையொட்டி ஜல்லிக்கட்டு போட்டிகாக காளைகளை தயார்படுத்தும் பணியில் காளைகளின் உரிமையாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்த செய்தி தொகுப்பை காணலாம்.

அரசின் விதிகளுக்கு உட்பட்டு விவசாயம் செழிக்க உழைத்த மாடுகளுக்கு நன்றிக்கடனை தெரிவிக்கவும், தமிழர்களின் வீரத்தை பறைசாட்டவும், ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டுக்காக காளைகளை தயார்ப்படுத்துவதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தை மாதம் முதல் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போட்டிகள் துவங்கவுள்ளதால், காங்கேயம், புளிகுளம், பாக்கூர் காளைகள் என பலவகையான நாட்டு இன காளைகளுக்கு தற்போது பயிற்சி அளிக்கின்றனர் காளைகளின் உரிமையாளர்கள்.

இலங்கை அமைச்சர் செந்தில் தொண்டைமானுக்கு சொந்தமான தோப்பில், 11 காளைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மாடுகளுக்கு தேவையான சத்தான உணவு பொருட்களை கொடுத்து வீட்டில் ஒருவராக காளைகளை வளர்க்கின்றனர்.மாடுபிடி வீரர்கள் கடந்த ஒரு மாதமாக காப்பு கட்டி தினமும் ஒரு வேலை விரமிருந்து, காலை, மாலை என இரு வேலைகளிலும் பயிற்சி எடுத்து வருகின்றனர். ஏற்கனவே மாடுகளை பிடித்த அனுபவத்தில் புதிய யுத்திகளையும் இளைஞர்கள் கையாண்டு வருகின்றனர். காளைகளுக்கு இணையாக நீச்சல் பயிற்சி, நடை, ஓட்டப் பயிற்சி மற்றும் சத்தான உணவுகளை உண்டு காளைகளை பிடித்து பாரம்பரிய விளையாட்டை காக்கும் முனைப்பில் உள்ளனர் மாடுபிடி வீரர்கள்.

Exit mobile version