தமிழக அரசு சார்பில் தமிழ் வழி கற்றலுக்கு சிறப்பு பயிற்சி முகாம்

திருவண்ணாமலையில் தாய்மொழி கற்றலில் சுணக்கம் உள்ள குழந்தைகளுக்காக நடத்தப்பட்ட குறுகிய காலத்தில் எழுத வாசிக்கும் பயிற்சி முகாமிற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

தமிழகத்திலேயே முதன்முறையாக திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ் வாசித்தலில் நூறு விழுக்காடு இலக்கு என்ற சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. குழந்தைகள் தாய் மொழியை பிழையற்ற முறையில் கற்பிக்க வேண்டும் என்பதற்காக எளிய முறையில் குறுகிய காலத்தில் எழுத, வாசிக்க கூடிய கற்றல் உத்திகள் மாணவர்களுக்கு சொல்லித் தரப்பட்டன. இந்த பயிற்சி முகாம் மாணவர்களுக்கு பெரிதும் உதவியாக இருந்ததாக பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

 

 

Exit mobile version