மேற்கு வங்க மாநிலத்தில் சுகாதாரத் துறையினருக்காக சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது!

மேற்கு வங்க மாநிலத்தில் சுகாதாரத் துறையினருக்காக, இன்று முதல் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, நாடு முழுவதும் பொது போக்குவரத்துக்கான ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. சரக்கு ரயில்கள் மட்டும் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையில், தன்னலமற்று செயலாற்றி வரும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவ துறையை சேர்ந்தவர்களுக்காக, மேற்கு வங்க மாநிலத்தில் சிறப்பு ரயில் சேவை துவங்கப்பட்டுள்ளது. இதில் மருத்துவத்துறையினரை தவிர மற்ற பொது மக்கள் வீண் பயணம் செய்யாமல் இருக்க, அடையாள அட்டைகள் மூலம் உறுதிப்படுத்தப்படுகிறது.

Exit mobile version