உதகையில் கோடை சீசன் களைகட்டியுள்ள உதகை-கேத்தி இடையே சிறப்பு ரயில் சேவை தொடங்கப்பட்டு இருப்பது சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
நீலகிரி மலை ரயில் பயணம் மேற்கொள்ள சுற்றுலாப் பயணிகள் அதிக ஆர்வம் காட்டிவருகின்றனர். இந்த நிலையில், சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க தென்னக ரயில்வே உதகையிலிருந்து கேத்திற்கு 7 நாட்களுக்கு 3 நேரம் ரயில் சேவையை கோடை சீசனுக்காக இயக்கி வருகிறது. மேலும் இந்த ரயிலில் 16 இருக்கைகள் கொண்ட முதல் வகுப்பு, 36 இருக்கைகள் மற்றும் 30 இருக்கைகள் கொண்ட இரண்டு இரண்டாம் வகுப்புகள் உள்ளன. ரயிலில் பயணிக்கும் சுற்றுலாப் பயணிகள் மலைப்பாதைகள், இயற்கை காட்சிகள் மற்றும் கேத்தி பள்ளதாக்கை ஆர்வமுடன் கண்டு ரசித்து வருகின்றனர்.