சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருச்சி மாவட்டம் அரியமங்கலம் ஜெய் அகோர காளி கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
சந்திரகிரகணம் ஆரம்பித்த நேரத்தில் ஓம் க்ரீம் என்று வரையப்பட்ட கோலத்தில் அகோரிகள் உடல் முழுக்க திருநீறு பூசிக்கொண்டு தலையில் அக்னிசட்டி ஏந்தி பூஜையில் ஈடுபட்டனர்.
அப்போது கழுத்தில் கபால மாலை அணிந்து கொண்டு மந்திரங்களை ஜெபித்தனர். ஊரடங்கு அமலில் உள்ளதால் பக்தர்கள் இன்றி பூஜைகள் நடைபெற்றன.