கோடை விழாவை முன்னிட்டு சிறப்பு இன்னிசை நிகழ்ச்சி

கொடைக்கானலில் கோடை விழாவை முன்னிட்டு, சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தும் வகையில் விளையாட்டு போட்டிகள், இன்னிசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் நடைபெற்று வரும் கோடை விழாவின் 5 ஆம் நாளில் ஹாக்கி போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மூஞ்சிக்கல் அரசு பள்ளி மைதானத்தில், ஆண்கள், பெண்கள் கலந்து கொண்ட ஹாக்கி போட்டிகளும், பிரையண்ட் பூங்காவில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் இன்னிசை கச்சேரியும் நடத்தப்பட்டன. இளைஞர்கள் முரசு கொட்டியும், நடனமாடியும் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தினர். கோடை விடுமுறை முடிந்து அனைத்து பள்ளிகளும் திறந்த நிலையில், சுற்றுலா பயணிகள் வருகை சற்று குறைவாகவே இருந்தது.

Exit mobile version