இந்தியா -அமெரிக்கா இடையே சிறப்பு ராணுவ கூட்டுப் பயிற்சி

இந்தியா- அமெரிக்கா ராணுவ வீரர்களுக்கு இடையேயான, மூன்று நாள் கூட்டு ராணுவப் பயிற்சி ராஜஸ்தானில் தொடங்கியுள்ளது.

தீவிரவாத்தை ஒழிக்க உலக நாடுகளுடன் இணைந்து இந்தியா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், அமெரிக்க ராணுவத்துடன் இணைந்து கூட்டு ராணுவப் பயிற்சியில் இந்தியா ஈடுபட்டு வருகிறது. ‘வஜ்ர பிரகார்-2018’ என்ற தலைப்பில் இரு நாடுகளுக்கு இடையேயான கூட்டு ராணுவப் பயிற்சி, கடந்த மாதம் 19-ம் தொடங்கி 12 நாட்கள் நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து, ‘வஜ்ர கயா’ எனப்படும் சிறப்பு கூட்டு ராணுவப் பயிற்சி ராஜஸ்தான் மாநிலம் பிகானீரில் தொடங்கியுள்ளது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில் இரு நாடுகளைச் சேர்ந்த சிறப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். இதில், மறைந்திருக்கும் தீவிரவாதிகளை கண்டுபிடித்து ஒழிப்பது, தீவிரவாதிகள் ஊடுருவலைத் தடுப்பது உள்ளிட்ட பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

 

Exit mobile version