தஞ்சை மாவட்டத்தில் நடைபெறும் குடிமராமத்து பணிகளை சிறப்பு கண்காணிப்பாளர் ககன் சிங் பேடி ஆய்வு செய்தார்!!!

தஞ்சை மாவட்டத்தில் நடைபெறும் குடிமராமத்து பணிகளை, உணவு உற்பத்தி ஆணையரும், குடிமராமத்து பணியின் சிறப்பு கண்காணிப்பாளருமான ககன் சிங் பேடி ஆய்வு செய்தார். தஞ்சாவூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை மூலம் மொத்தம் 128 கோடியே16 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குடிமராமத்து மற்றும் தூர்வாரும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. குறுவை சாகுபடிக்காக இந்த ஆண்டு மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்ததை அடுத்து தூர்வாரும் பணிகள் மற்றும் குடிமராமத்து பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த பணிகளை உணவு உற்பத்தித் துறை ஆணையரும் குடிமராமத்து பணியின் சிறப்பு கண்காணிப்பாளருமான ககன் சிங் பேடி ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ் உள்பட வேளாண்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் ஆய்வின் போது உடன் இருந்தனர்.

Exit mobile version