மேட்டுப்பாளையம் -குன்னூர் இடையே சிறப்பு மலை ரயில் சேவை தொடக்கம்

மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரையிலான சிறப்பு மலை ரயில் சேவை இன்று முதல் துவங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை வரை தினசரி காலை 7.10 மணிக்கு மலை ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில், சுற்றுலா பயணிகளின் வசதிக்காக கூடுதல் சிறப்பு மலை ரயில் சேவை இன்று முதல் துவக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு மலை ரயில் மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 9.10 மணிக்கு புறப்பட்டு 12.30 மணிக்கு குன்னூரை சென்றடையும்.

இந்த மலை ரயில் அனைத்து சனிக்கிழமைகளிலும் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. சிறப்பு ரயிலில் பயணிப்பவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் 200 ரூபாய் மதிப்பிலான பரிசுப் பொருட்களை ரயில்வே நிர்வாகம் வழங்கியது.

Exit mobile version