உலக கோப்பையில் இந்தியா வெற்றி பெற வேண்டி சிறப்பு நிகழ்ச்சி

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, இந்தியா உலக கோப்பையில் வெற்றி பெற வேண்டி, ஐந்தாயிரத்து ஒன்று பள்ளி மாணவர்கள் உலக கோப்பை வடிவில் அமர்ந்து நடத்திய நிகழ்ச்சி பார்வையாளர்களை கவர்ந்தது.

சர்வதேச யோகா தினம் வரும் 21ஆம் தேதி கடைபிடிக்கப்பட உள்ளது. இந்த நிலையில் யோகா தினத்தை முன்னிட்டு, சென்னை முகப்பேரில் உள்ள வேலம்மாள் பள்ளியில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் போது பல்வேறு வகையான யோக கலைகளை அவர்கள் செய்து காட்டினர். நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக, 5 ஆயிரத்து ஒன்று மாணவர்கள் இணைந்து கிரிக்கெட் உலக கோப்பை வடிவில் அமர்ந்து பிரமிப்பை ஏற்படுத்தினர். இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியா கோப்பையை வெல்ல வேண்டி இவ்வாறு செய்ததாக மாணவர்கள் உற்சாகத்துடன் தெரிவித்தனர். இந்தியா கோப்பையை வெல்ல வேண்டும் என இயற்கை அன்னையை அவர்கள் பிராத்தனை செய்தனர்.

Exit mobile version