சிறப்பு பொருளாதார மண்டலங்களின் அவசர சட்டம் மாற்றத்திற்கு குடியரசு தலைவர் ஒப்புதல்

சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அவசர சட்டத்திற்கு மாற்றாக புதிய சட்டதிருத்த மசோதாவிற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

சிறப்பு பொருளாதார மண்டலங்கள் திருத்த மசோதாவிற்கு கடந்த மாதம் ஜூன் 13ஆம் தேதி நாடாளுமன்ற கூட்டத்தொடரிலேயே அறிமுகப்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது. இந்நிலையில், சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அவசர சட்டத்திற்கு மாற்றாக அவசர சட்ட திருத்த மசோதாவிற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். இதனையடுத்து சிறப்பு பொருளாதார மண்டலங்கள் சட்டம், 2005-ல் பிரிவு 2ன் கீழ் துணைப்பிரிவு 5ல் திருத்தம் செய்யப்பட்டது. அதன்படி மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட அறக்கட்டளையோ அல்லது அமைப்போ, சிறப்பு பொருளாதார மண்டலத்தில் தொழிற்கூடம் அமைப்பதற்கான அனுமதியைப் பெறுவதற்கான தகுதியைப் பெறும் என்பதும் விளக்கப்பட்டுள்ளது.

Exit mobile version