தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தர்ப்பணம் செய்து சிறப்பு வழிபாடு

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடி அமாவாசையை விழாவில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்தவர்கள் கலந்து கொண்டனர். அதிகாலை முதலே முன்னோர்களுக்கு
கடற்கரையில் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். பின்னர் கடலில் நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு பாபநாசம் தமிரபரணி ஆற்றில் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.இதில் திரளானோர் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். ஏராளமான காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

திருவள்ளூரில் உள்ள பிரசித்தி பெற்ற வீரராகவ பெருமாள் கோயிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வந்தவர்களும் இதில் கலந்து கொன்டனர்..

தூத்துக்குடி புதிய துறைமுகம் கடற்கரையில் ஏராளமானோர் தங்களது முன்னோர்களுக்கு படையல் வைத்து ,கடலில் நீராடி தர்ப்பணம் செய்து வழிபட்டனர். இதனால் துறைமுக பகுதியில் பொதுமக்கள் கூட்டம் அலை மோதியது..

புண்ணிய தீர்த்தமான கும்பகோணம் மகாமக குளக்கரையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு அதிகாலையில் இருந்து ஏராளமானோர் மகாமக குளக்கரையில் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு நடத்தி
வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்தனர். கடலில் நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.பின் நீண்ட வாரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இதனால் ராமேஸ்வரம் கடற்பகுதியில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது..

 

Exit mobile version