பிளாஸ்டிக் பயன்படுத்துவதை கண்காணிப்பதற்காக, நெல்லையில் 4 சிறப்பு கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
தச்சநல்லூர், மேலப்பாளையம், டவுன், பாளையங்கோட்டை ஆகிய நான்கு மண்டலங்களிலும், பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தடுப்பதற்காக உதவி பொறியாளர், சுகாதார ஆய்வாளர்கள், காவல் ஆய்வாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுக்களை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் காவல் துறை அதிகாரிகள் அடங்கிய முக்கிய குழு கண்காணிக்கும் என மாநாகராட்சி ஆணையர் நாராயணன் நாயர் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பிளாஸ்டிக்கை பயன்படுத்த வேண்டாம் என்றும் மீறினால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநகராட்சி ஆணையர் நாராயணன் நாயர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.