உணர்வுகளை வார்த்தைகள் இல்லாமல் வெளிப்படுத்தும் எமோஜிக்களின் வரலாறு பற்றி தெரியுமா?

அன்பை, கோபத்தை, மகிழ்ச்சியை, வருத்தத்தை எழுத்துகளே இல்லாமலேயே வெளிப்படுத்தும் வார்த்தைகள்தான் எமோஜிக்கள்… இன்று உலக எமோஜி தினம். எமோஜிக்களின் வரலாற்றை சுருக்கமாகப்  இந்தத் தொகுப்பில் பார்ப்போம்.

ஜப்பானைச் சேர்ந்த எண்டிடி டொகொமோ என்ற நிறுவனத்தில் பணியாற்றிய ஷிகேடிகா குரிடா என்பவர் 1998ஆம் ஆண்டில் செய்திகளை சித்திரங்களாகச் சொல்ல விரும்பினார், அன்றைக்கு இருந்த தொழில் நுட்பத்தில் அவரால் நினைத்ததை முழுமையாக சாதிக்க முடியவில்லை. இதனால் குறிப்பிட்ட உணர்ச்சிகளை மட்டும் வெளிப்படுத்தும் சித்திரங்களை அவர் உருவாக்கினார் அவைதான் எமோஜிகள்.

முதலில் மக்கள் அடிக்கடி உணரும் 180 உணர்வுகளுக்கு மட்டுமே குரிடா எமோஜிகளை உருவாக்கினார். இப்போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட உணர்வுகளுக்கு எமோஜிக்கள் உள்ளன.

சமூக வலைத் தளங்களில் ஒவ்வொருவரும் தங்கள் தாய் மொழிகளில் பதிவுகளை இடும் போது, உலகெங்கெலும் உள்ள அனைவருக்கும் பொதுவானதாக இந்த எமோஜிக்கள்தான் உள்ளன. 

இதனால், மக்களின் தேவைகளை ஆய்வு செய்து ஒவ்வொரு ஆண்டும் புதிய புதிய எமோஜிக்கள் உருவாக்கப்படுகின்றன. கடந்த ஆண்டில் ஆப்பிள் நிறுவனம் மட்டுமே 70க்கும் மேற்பட்ட புதிய எமோஜிக்களை வெளியிட்டது. இப்போது எமோஜிகளுக்காக என்றே பிரத்யேக வலைத் தளங்கள் கூட உள்ளன.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட எமோஜிக்கள் வந்துவிட்டாலும், வெகுசில எமோஜிக்கள்தான் மக்களால் பெரிதும் விரும்பப்படுகின்றன. இந்தியாவை எடுத்துக் கொண்டால், சிரித்துக் கொண்டே கண்ணீர் சிந்தும் ’டியர்ஸ் ஆஃப் ஜாய்’ – எமோஜிதான் மக்களால் அதிகம் விரும்பப்படும் எமோஜியாக உள்ளது. முகநூல், வாட்ஸாப் போன்ற சமூக ஊடகங்களில் இதுவே அதிகமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு அடுத்த நிலையில் ‘புளோயிங் எ கிஸ்’, ஸ்மைலிங் ஃபேஸ் வித் ஹார்ட் ஐஸ், கிஸ் மார்க், ஓகே ஹேண்ட், லவுட்லி கிரையிங் ஃபேஸ் –  ஆகியவை உள்ளன.

 
 
Exit mobile version