ஜனவரி 11,12ம் தேதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்

வாக்காளர்கள் பெயர் சேர்ப்பு மற்றும் திருத்தம் மேற்கொள்ளும் வகையில், வரும் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில், சிறப்பு   முகாம் நடைபெறும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, சென்னை ராணி மேரி கல்லூரியில் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து மாணவிகளுக்கிடையேயான மெஹந்தி, கட்டுரை, ஓவியம் ஆகிய போட்டிகள் நடைபெற்றது. போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ்களை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வலிமையான மக்களாட்சி உருவாக்குவதில் வாக்காளர்களுக்கு அதிக பங்கு இருப்பதாக தெரிவித்தார். வாக்காளர்கள், பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தம் மேற்கொள்ள சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டதாக கூறினார். கடந்த 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் நடைபெற்ற, வாக்காளர்கள் சிறப்பு முகாமில் 9 லட்சம் பேர் பெயர் சேர்ப்பு மற்றும் திருத்தம் தொடர்பாக விண்ணப்பம் செய்துள்ளதாக அவர் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், வரும் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில், வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளதாகவும், அதனை வாக்காளர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

Exit mobile version