காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழகத்தில் உள்ள 42 சுகாதார மாவட்டங்களிலும் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் பரவுவதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு ராணியார் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற, காய்ச்சல் மற்றும் தொற்று நோய் விழிப்புணர்வு நிகழ்ச்சியை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் தாக்கம் காரணமாக தமிழகத்தில் உள்ள 42 சுகாதார மாவட்டங்களிலும் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளதாகவும், தேவைப்பட்டால் கூடுதல் செவிலியர்களை நியமித்துக் கொள்ள அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.
Discussion about this post