திருவண்ணாமலையில், இஸ்லாமியர்களின் கண்ணியமான இரவை வரவேற்கும் விதமாக 3 டன் எடையில் பூந்தி தயாரிக்கும் பணியில் தன்னார்வலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இஸ்லாமியர்களின் ரமலான் நோன்பு கடந்த 5 ஆம் தேதி தொடங்கியது. ரமலான் மாதம் 27 ஆம் நாள் இரவு, குர்ஆன் பூமிக்கு வந்தடைந்த நாளாக கருதி தொழுகையை முடித்து வருபவர்களுக்கு பூந்தி வழங்கி தங்களது அன்பை தெரிவிப்பர். இந்த நிலையில் திருவண்ணாமலை மத்தலாங்குளத் தெருவில் உள்ள நவாப் சந்தாமியான் மஸ்ஜித்தில் அனைவருக்கும் இனிப்பு வழங்குவதற்காக 3 டன் பூந்தி தயாரிக்கும் பணியானது கடந்த 2 தினங்களாக நடைபெற்று வருகிறது. இந்த பூந்தியானது வருகின்ற ஜீன் மாதம் 1 ஆம் தேதி இரவு தொழுகையை முடித்து வரும் இஸ்லாமியர்கள் மட்டுமின்றி அனைத்து சமுதாய மக்களுக்கும் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.