நாடாளுமன்றத்தில் எம்பி ஒருவரின் குழந்தைக்கு பால் ஊட்டிய சபாநாயகர்

நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் எம்பி ஒருவரின் குழந்தைக்கு சபாநாயகர் பாட்டிலில் பால் ஊட்டிய நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. 

 நியூசிலாந்தின் தொழிலாளர் கட்சி எம்பியான டமாட்டி கோஃபி((Tāmati Coffey)) மற்றும் அவரது கணவர் டிம் ஸ்மித் ஆகியோர் வாடகை தாய் மூலம் ஆண் குழந்தையை பெற்றெடுத்தனர். கடந்த ஜூலை மாதம் பிறந்த அந்த குழந்தைக்கு ஸ்மித்- கோஃபி((Tūtānekai Smith-Coffey)) என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தனது குழந்தையுடன் டமாட்டி நாடாளுமன்றத்திற்கு வந்துள்ளார்.

நாடாளுமன்ற அலுவல்கள் நடைபெற்று கொண்டு இருந்த போது அவரது குழந்தையை வாங்கிய
சபாநாயகர் டிரெவோர் மலார்ட், குழந்தைக்கு பாட்டில் மூலம் பால் ஊட்டினார். பின்னர் தனது இருக்கையை அசைத்து குழந்தையை தட்டிக்கொடுத்து கவனித்துக்கொண்டார்.

குழந்தைகள் மீது மிகுந்த பிரியம் கொண்ட மலார்ட், கடந்த 2017ஆம் ஆண்டு எம்பி வில்லோவ் ஜீன் ப்ரைம்மின் குழந்தையை, இதே போன்று நாடாளுமன்றத்தில் கவனித்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version