பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைந்த பிறகு நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஜூன் மாதம் 17-ம் தேதி தொடங்கியது. மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டை தொடர்ந்து, நிலுவையில் உள்ள பல்வேறு முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம் காட்டியது.
குறிப்பாக முத்தலாக் தடை மசோதா, என்.ஐ.ஏ., மோட்டார் வாகன திருத்த சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. அதைத்தொடர்ந்து காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா நீண்ட விவாதத்திற்கு பிறகு நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, மக்களவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார்.