கடும் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாளை வரை ஒத்திவைப்பு

டெல்லி வன்முறை சம்பவத்தை கண்டித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் போராட்டம் நடத்தியதால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று தொடங்கியது. வடகிழக்கு டெல்லி வன்முறை சம்பவம் இரு அவைகளிலும் எதிரொலித்ததால், பிற்பகல் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து மீண்டும் அவை கூடியது. மக்களவையில் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் உறுப்பினர்கள், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக கோரி முழக்கங்களை எழுப்பினர். இதனால் அவையில் கடும் கூச்சல், குழப்பம் நிலவியது.

அமளிக்கிடையே பேசிய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, 1984ம் ஆண்டு நடந்த கலவரத்தில் மூவாயிரம் பேர் பலியானதற்கு நடவடிக்கை எடுக்காதவர்கள், தற்போது கொந்தளிப்பதாகவும், இது மிகவும் கண்டனத்துக்குரியது எனவும் சாடினார்.

இதேபோல், மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள், அமளியில் ஈடுபட்டனர். டெல்லி வன்முறை சம்பவத்தை கண்டித்து, அவையின் மையப்பகுதிக்கு சென்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கங்களை எழுப்பினர். இதனால் இரு அவை நடவடிக்கையும் பாதிக்கப்பட்டது.

Exit mobile version