ரஷ்யா பாதுகாப்பு அமைச்சர் சென்ற விமானத்தை இடைமறித்த ஸ்பெயின் போர் விமானம்

ரஷ்யாவுக்கு சொந்தமான போர் விமானத்தில் அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோயுக் பயணம் மேற்கொண்டார். விமானம் பால்டிக் கடல் பரப்பில் சென்று கொண்டிருந்த போது, ஸ்பெயினின் நோட்டா படைக்கு சொந்தமான எஃப்-18 ரக போர் விமானம் ஒன்று இடைமறித்துள்ளது. மேலும், ரஷ்ய விமானத்தை தாக்குவது போன்றும் செயல்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் திடீரென அந்த பகுதிக்கு ரஷ்யாவின் அதிநவீன சு-27 ரக போர் விமானம் வேகமாக வந்ததுள்ளது. இதனை கண்ட ஸ்பெயின் விமானத்தின் விமானி பின் வாங்கியதுடன் விமானத்தை வேறு திசையில் திருப்பியுள்ளார். ஸ்பெயின் விமானத்தை விரட்டியடித்த ரஷிய போர் விமானம் தொடர்ந்து அமைச்சரின் விமானத்திற்கு பாதுகாப்பு அளித்தபடி பின் தொடர்ந்து சென்றது.

Exit mobile version