மத்திய அமைச்சர் சுஷ்மாவை கவுரவித்த ஸ்பெயின் அரசு

நேபாளத்தில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் தங்கள் நாட்டு மக்களை காப்பாற்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மாவுக்கு ஸ்பெயின் அரசு விருது வழங்கி கவுரவித்துள்ளது. வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பெல்ஜியம், மொராக்கோ, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். ஸ்பெயின் நாட்டுக்கு சென்ற சுஷ்மா சுவராஜ், அந்நாட்டு வெளியுறவு அமைச்சரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

2015ம் ஆண்டு நேபாளத்தில்  ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கிய 71 ஸ்பெயின் நாட்டவர்களை இந்திய மீட்புப் படையினர் பத்திரமாக காப்பாற்றினர்.  இதற்காக அந்நாட்டின் மிகவும் உயர்ந்த, கிரான்ட் கிராஸ் விருதை சுஷ்மா சுவராஜூக்கு, ஸ்பெயின் வெளியுறவுத்துறை ஜோசப் போரெல்ஃப்  அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

Exit mobile version