நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஸ்பெயின் பிளம்ஸ் விற்பனை களைகட்டியுள்ளது. நீலகிரி மாவட்டத்தின் குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பேரி, பிளம்ஸ், சீதாபழம், மங்குஸ்தான், ஸ்ட்ராபெரி, துரியன் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ குணம் வாய்ந்த பழங்கள் அதிகளவில் விளைவிக்கப்படுகின்றன. பொதுவாக நீலகிரியில் ரூபி பிளம்ஸ் அதிகளவில் விளைவிக்கப்படுகின்றன.
இந்தப் பழங்களின் சீசன், ஏப்ரல் முதல் ஜூன் மாதங்களாக உள்ள நிலையில், தற்போது ஸ்பெயின் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பழங்கள், சென்னையில் இருந்து வரவழைக்கப்பட்டு அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன. அதிக இனிப்புச்சுவை கொண்ட இந்தப் பழங்கள் கிலோ ஒன்றுக்கு 200 ரூபாய் முதல் 250 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
இதனிடையே, இந்தவகை பிளம்ஸ் நாற்றுகளை நீலகிரியில் வளர்க்க தோட்டக்கலைத் துறையினர் முன்வர வேண்டுமென விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.